Social Icons

Mobile

Wednesday, October 31, 2012

Word Document-ல் Short cut மூலம் Symbol களை பெற்றுக்கொள்ள

Word Document தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது.
இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை Alt Key அழுத்தியவாறே தந்தால், அவை
உருவாக்கப்பட்டு Textடுடன் அமைக்கப்பட்டு விடும்.

† கத்தி போன்ற இந்த அடையாளம் பெற Alt + 0134.
இதனையே இரட்டையாகப் பெற Alt + 0135.
™ Trade Markஅடையாளம் ஏற்படுத்த Alt +0153.
£ Pounds அடையாளம் பெற Alt + 0163.
¥ Japan Currency Yen அடையாளம் பெற Alt +0165.
© Cpoyright அடையாளம் கிடைக்க Alt + 0169.
® Register Trade Mark அடையாளம் உண்டாக்க Alt +0174.
° Degree என்பதனைத் தெரிவிக்கும் அடையாளம் பெற Alt +0176.
± Plus or Minus என்பதனைக் காட்ட Alt +0177.
· நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த Alt+0183.
¼ கால் என்பதைக் குறிக்க Alt + 0188.
½ அரை என்பதைக் குறிக்க Alt + 0189.
¾ முக்கால் என்பதனைக் குறிக்க Alt + 0190.

MS Excel ல் உங்கள் வயதைக் கண்டறிய.

எம்.எஸ்.எக்ஸலில் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் நாட்களின் வித்தியாசத்தை ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழிப்பதன் மூலம் இலகுவாகக் கணித்து விடலாம். எனினும் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் வித்தியாசத்தை வருடங்களில் மாதங்களில் நாட்களில் எப்படி கண்டறிவது? அதற்கும் ஒரு இலகுவான வழி முறை எக்ஸ்லில் உள்ளது..
இதற்கு எக்ஸலில் உள்ள Datedif எனும் பங்க்ஸ்ன் (function) பயன் படுத்தப்படுகிறது. இந்த Datedif எனும் பங்ஸனை = Datedif (திகதி1, திகதி2, விடை காண வேண்டிய வடிவம்) {=DATEDIF(Date1, Date2, OutputRequirement)} எனும் ஒழுங்கிலேயே வழங்க வேண்டும். OutputRequirement எனுமிடத்தில் மேற்கோள் குறிகளுக்கிடையே "Y” என வழங்கும் போது வருட வித்தியாசத்தையும் "M” என வழங்கும்போது மாதங்களின் வித்திய்சாத்தையும் "D” என்பது நாட்களின் வித்தியாசத்தையும் தரும். இங்கு திகதி1 ஐ விட திகதி2 பெரிதாக இருக்க வெண்டும் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்..
உதாரணமாக 8/8/1990 எனும் திகதிக்கும் 13/05/2008 எனும் திகதிக்கும் இடையில் எத்தனை வருடங்கள் உள்ளன? எத்தனை நாட்கள் உள்ளன? எத்தனை மாதங்கள் உள்ளன எனக் கணக்கிட முதலில் எக்ஸல வர்க் சீட்டில் B3 எனும் செல்லில் 08/08/1990 எனும் திகதியையும் B4 எனும் செல்லில் 13/05/2008 எனும் திகதியையும் உள்ளீடு செய்யுங்கள்.. திகதியை உள்ளீடு செய்யும்போது உங்கள் கணினியில் திகதி உள்ளீடு செய்யும் வடிவத்தையும் (Date format) கவனத்திற் கொள்ள மறந்து விடாதீர்கள் அனேகமாக் விண்டோஸில் MM/DD/YYYY (மாதம் /திகதி/வருடம்) எனும் திகதி வடிவமே இயல்பு நிலையில் இருக்கும்
அடுத்து இரண்டு திகதிகளுக்கிடையிலுள்ள வருட வித்தியாசத்தைக் கண்டறிய B6 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,”Y”) எனும் சமன்பாட்டை டைப் செய்யுங்கள். விடையாக 17 (வருடங்கள்) வரக் காணலாம். அதேபோல் இரண்டு திகதிகளுக்கிடையேயுள்ள மாதங்களின் எண்ணிக்கையைக் காண B7 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,”M”) எனவும் நாட்களின் வித்தியாசத்தைக் காண B8 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,”D”) எனவும் வழங்குங்கள்.
இன்னும் சற்று மாறுதலாக இன்றைய திகதிக்கு உங்கள் வயது என்ன என்பதைக் கண்டறிய வேண்டுமானால் மேற் சொன்ன சமன்பாட்டில் சிறிய மாற்றத்தைச் செய்ய வெண்டும். .
உதாரணமாக B2 எனும் செல்லில் உங்கள் பிறந்த திகதியையும் B3 எனும் செல்லில் இன்றைய திகதியையும் டைப் செய்யுங்கள். B5 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,”Y”) எனும் சமன் பாட்டை வழங்கும் போது வருட வித்தியாசம் கிடைக்கும். அவ்வாறே B6 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,”YM”) என வழங்குங்கள். வருடங்கள் நீங்களாக மாத வித்தியாசம் கிடைக்கும். B7 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,”MD”) எனும் சமன்பாட்டை வழங்க வருடங்களையும் மாதங்களையும் தவிர்த்து நாட்களின் வித்தியாச்ம் மாத்திரம் கிடைக்கும்.
இதே சமன்பாட்டை இன்னும் சற்று மாற்றி இன்று உன் வயது …வருடங்கள் … , மாதங்கள் …., நாட்கள் எனவும் காட்டலாம். அதற்கு எக்ஸ்லில் உள்ள TEXT எனும் பங்ஸனையும் பிரயோகிக்க் வேண்டும். இந்த பங்ஸன் என் பெறுமாணத்தை டெக்ஸ்டாக மாற்றி விடுகிறது.
அதற்கு வேறொரு செல்லில் =”இன்று உன் வயது ” & TEXT(B5, "0″) & ” வருடங்கள் ,” & TEXT(B6, "0″) & ” மாதம் ,” & TEXT(B7, "0″) & ” நாட்கள்.” என வழங்குங்கள். இன்று உன் வய்து 19 வருடங்கள் ,1 மாதம் ,19 நாட்கள். எனும் விடையை எக்ஸல் காண்பிக்கும்.

Wednesday, October 24, 2012

எம்.எஸ். வர்டில் போமட் பெயிண்டர்


எம். எஸ். வர்டில் ஸ்டேண்டர்ட் டூல்பாரில் போமட் பெயிண்டர் எனும் பட்டன் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஏற்கனவே பிரயோகித்த போமட்டிங்கை ஒரு ஆவணத்திலுள்ள வேறொரு பகுதிக்குப் பிரயோகிக்கவே இந்த போமட் பெயிண்டர் பட்டன் உதவுகிறது. 


எழுத்துக்கள (text) இலகுவாகப் போமட் செய்யும் வசதியை தரும் இந்த பட்டனை ஏனோ பலரும் அரிதாகவே பயன்படுத்துகின்றனர். இந்த பட்டனை எவ்வாறு பயன்படுத்துவது?