Social Icons

Mobile

Wednesday, October 24, 2012

எம்.எஸ். வர்டில் போமட் பெயிண்டர்


எம். எஸ். வர்டில் ஸ்டேண்டர்ட் டூல்பாரில் போமட் பெயிண்டர் எனும் பட்டன் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஏற்கனவே பிரயோகித்த போமட்டிங்கை ஒரு ஆவணத்திலுள்ள வேறொரு பகுதிக்குப் பிரயோகிக்கவே இந்த போமட் பெயிண்டர் பட்டன் உதவுகிறது. 


எழுத்துக்கள (text) இலகுவாகப் போமட் செய்யும் வசதியை தரும் இந்த பட்டனை ஏனோ பலரும் அரிதாகவே பயன்படுத்துகின்றனர். இந்த பட்டனை எவ்வாறு பயன்படுத்துவது? 

எம். எஸ். வர்டைத் திறந்து ஒரு உரைப் பகுதியை டைப் செய்துஜீ ont, font size, bold. italic, underline லீபோன்ற பல வகையான போமட்டிங்கை அதன் மீது பிரயோகியுங்கள். 

அடுத்து போமட் செய்த பகுதியை தெரிவு செய்து டூல் பாரிலுள்ள போமட் பெயிண்டர் பட்டனில் க்ளிக் செய்யுங்கள். இப்போது மவுஸ் பொயிண்டர் ஒரு தூரிகை வடிவில் மாறக் காணலாம். அடுத்த போமட் செய்ய வேண்டிய டெக்ஸ்டின் மீது மவுஸை ட்ரேக் செய்யுங்கள் இப்போது முன்னர் போமட் செய்திருந்த வடிவிற்கு டெக்ஸ் மாறக் காணலாம். 

ஆனால் ஒரு முறை போமட் பெயிண்டரை பிரயோகித்த பின்னர் மறுபடியும் பிடியோகிக்க முடியாது. ஒரே போமட்டிங்கை திரும்பத் திரும்ப பயன்படுத்த வேண்டுமானால் டெக்ஸ்டைத் தெரிவு செய்து விட்டு போமட் பெயிண்டர் பட்டனில் இரட்டை க்ளிக் செய்யுங்கள் அதனைக் இல்லாமல் செய்ய வேண்டுமானால் போமட் பெயிண்டர் பட்டனில் மறுபடி ஒரு க்ளிக் செய்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment